விஜய்யின் மாஸ்டரைத் தொடர்ந்து, ’தளபதி 65’ வாய்ப்பை கைப்பற்றிய இயக்குநர் இவர் தானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

Master Thalapathy 65 Vijay next film with Magizh Thirumeni Pandiraj Lokesh Kanagaraj

இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், விஜே ரம்யா, விஜய் டிவி புகழ் தீனா, கௌரி கிஷன், மகேந்திரன் என ஒரு பெரும்  நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜயின் அடுத்த படம் குறித்து பலவாறான தகவல்கள் இணையத்தில் உலவி வருகின்றன. அடுத்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் அல்லது மகிழ்திருமேனி இயக்க உள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இந்த வாய்ப்பை கைப்பற்றிவிட்டதாக தகவல் சமீபத்தில் பரவத்தொடங்கியது. இந்த வதந்திகளில் உண்மை இல்லை. இன்னும் தளபதி 65 படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

Entertainment sub editor