ஜெயம் ரவியின் பூமி - மாஸ் டைரக்டரின் சர்ப்ரைஸ் இருக்கு..! டீசர் குறித்து Exclusive தகவல்கள்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தின் டீசர் குறித்து முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பூமி. ரோமியோ ஜுலியட், போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷமன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். நடிகை நிதி அகர்வால் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூமி படத்தின் டீசர் குறித்து பிரத்யேகமான தகவல் தெரியவந்துள்ளது. இப்படத்தின் டீசரில் தடையற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேணி, படத்தின் வில்லனுக்கு குரல் கொடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் சுமார் ஒரு நிமிடம் பத்து செகன்டுக்கு இந்த டீசர் தயாராகியிருப்பதாகவும், ரசிகர்களை மிரட்டும் வகையில் இது இருக்கும் எனவும் நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.