www.garudabazaar.com

'தடம்' இயக்குநருடன் 'கைகோர்த்த' உதயநிதி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சைக்கோ படத்திற்கு பின் நடிகர் உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. தடம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்கவர்ந்த இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தின் பணிகள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

Udhayanidhi join Hands with Magizh Thirumeni for his Next

அரோல் கரோலி இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். விரைவில் பிற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. உதயநிதி நடிப்பில் கடைசியாக வெளியான சைக்கோ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதேபோல தடம் படத்தின் வழியாக ரசிகர்கள் நெஞ்சங்கவர்ந்த இயக்குநராக மகிழ் திருமேனி மாறியிருக்கிறார். இதனால் இருவரும் முதன்முறையாக இணைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. தடம் வரிசையில் இதுவும் ஆக்ஷன் படமாக இருக்குமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

Udhayanidhi join Hands with Magizh Thirumeni for his Next

People looking for online information on Magizh Thirumeni will find this news story useful.