www.garudabazaar.com

அவங்க 'ரெண்டு' பேருக்கும் ஸ்டார்ட் ஆகும்னு பார்த்தா... திடீர்னு வேற 'டிராக்'ல போகுது

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. முதல் மூன்று சீசன்களிலும் காதல் டிராக் கண்டிப்பாக இருந்தது. ஆரவ்-ஓவியா, மஹத்-யாஷிகா, கவின்-லாஸ்லியா என ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காதல் ஜோடி பெரிதாக பேசப்பட்டனர். ஆனால் ஆரவ் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஓவியா இன்னும் சிங்கிளாக இருந்து வருகிறார். மஹத் தன்னுடைய காதலியை மணந்து கொண்டார். கவின் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

Bigg Boss 4 Tamil: Will the love story continue this Season?

இந்த நிலையில் 4-வது சீசன் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. முதல் வாரம் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனோட காதல் ஜோடி பாலாஜி-ஷிவானி தான் என கருத்து தெரிவித்தனர். ஆனால் பாலாஜி, ஷிவானியை கிண்டல் அடித்து சிரிக்கிறார். இதேபோல ஷிவானி, பாலாஜியை நாமினேட் செய்ய விரும்புகிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் காதல் வர வாய்ப்பில்லை என்பது தெரிகிறது. அதே நேரம் பாலாஜி-கேப்ரியலா இடையே ஒரு நட்பு உருவாகி இருக்கிறது.

ஆஜித், பாலாஜி, கேப்ரியலா மூவரும் அமர்ந்து மற்றவர்களை கிண்டலடித்து மகிழ்கின்றனர். ஷிவானியை தோழியாக கருதும் கேப்ரியலாவும் ஷிவானிக்கு சப்போர்ட் செய்யாமல் அவருடன் சேர்ந்து சிரிக்கிறார். இதனால் இந்த சீஸனின் காதல் ஜோடி இவங்க தான் பாஸ் என ரசிகர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர். மறுபுறம் இல்லை ஆஜித்-கேப்ரியலா தான் இந்த சீஸனின் காதல் ஜோடி என யூகம் செய்து வருகின்றனர். வேறு சிலரோ இந்த சீசன்ல லவ் டிராக் இல்லப்பா இதுவே நல்லா தான் இருக்கு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யாரா இருக்கும்?

Bigg Boss 4 Tamil: Will the love story continue this Season?

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.