துபாய்யை தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டார் - எங்க திரும்பினாலும் அவர் தான் அப்படி என்ன இடம் அது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு துபாயில் உள்ள ரசிகர் ஒருவர் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள ஹோட்டல் தற்போது வைரலாகி வருகிறது.

Superstar Rajinikanth hotel in Dubai filled with Rajini's photos

துபாயில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல் முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டாரை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ரஜினிகாந்த் சவுத் இந்தியன் ஹோட்டல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஹோட்டலில், ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களின் புகைப்பட தொகுப்பை ஒரு சுவர் முழுவதும் பதித்து வைத்துள்ளனர். மேலும், ரஜினிகாந்தின் மிகவும் பிரபலமான வசனங்களான, ‘கதம் கதம்!’,‘கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கைவிட்டுடுவான்.. நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்’,‘நல்லவனா இருக்கலாம் ஆனா ரொம்ப நல்லவனா இருக்கக்கூடாது’,‘போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்’ உள்ளிட்ட பல வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

7 நாட்களும் 24 மணிநேரமும் இயங்கும் இந்த ஹோட்டலுக்கு ரஜினி ரசிகர்கள் வந்தால், செம்ம ட்ரீட்டாக இருக்கும் என கூறுகின்றனர்.