SJ சூர்யா-பிரியா பவானி ஷங்கர் இணையும் படத்திற்கு வாழ்த்துக் கூறிய ‘தர்பார்’ பிரபலம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 09, 2019 01:23 PM
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் SJ சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று (அக்.9) தொடங்கியது.

'மான்ஸ்டர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், SJ சூர்யா நடிக்கிறார். இந்த படத்திலும், SJ சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.
இப்படத்தை நடிகர் SJ சூர்யா ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார். குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
சமீபமாக மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் SJ சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும், கதிர் கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இன்று (அக்.9)ம் தேதி படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கியது. இது குறித்து நடிகர் SJ சூர்யா, ‘இன்று எனது அடுத்த பயணம் நண்பர், தொழிலதிபர் சுனில் ரா கேமரா ஆன் செய்ய இனிதே படப்பிடிப்பு துவங்கியது. ராதா மோகன் இயக்கத்தில் , பிரியா பவானி சங்கர் இணைய , யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கில் 2020 வரும் காதலர் தினத்தன்று உங்களை சந்திக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
SJ சூர்யா-வின் புதுப்படம் தொடங்கியுள்ளதையடுத்து, பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருவது குரிப்பிடத்தக்கது.
இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கி ஒரே கட்டமாக முடித்து வரும் 2020 பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தவிர, SJ சூர்யா 'உயர்ந்த மனிதன்' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'இரவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.
Best wishes sir 🔥🔥👍 https://t.co/EnsTcfen8q
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 9, 2019