‘தலைவர் 168’-க்கு முன் சூப்பர்ஸ்டார் இமயமலை பயணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை ஆன்மிக சுற்றுலாவுக்காக இமயமலை புறப்பட்டுச் சென்றார்.

Superstar Rajinikanth to visit Himalaya for a spiritual trip

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ திரைப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. ‘எந்திரன்’, ‘பேட்ட’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 3 வது முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ‘விஸ்வாசம்’ திரைப்பட இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கவிருக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்பாக ஆன்மிக பயணமாக இன்று காலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். சுமார் 10 நாட்கள் அங்கு தங்க திட்டமிட்டுள்ள ரஜினிகாந்த், அங்கு கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவிருக்கிறார். அதற்காக இன்று காலை சென்னையில் இருந்து 6.40 மணிக்கு விமானத்தில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் பிற இடங்களுக்கு ரஜினிகாந்த் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இன்று காலை இமயமலை புறப்பட்டுச் சென்றார். இமயமலை செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.