“இது எங்க அப்பா-அம்மாவோட கனவு..” - சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6வது சீசன் வெற்றியாளரான செந்தில் தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி கிரக பிரவேசம் செய்துள்ளார்.

Super Singer fame Senthi Ganesh Rajalakshmi couple house warming pictures goes viral

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட செந்தில்-ராஜலக்ஷ்மி ஜோடி நாட்டுப்புற பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தனர். இவர்கள் ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், திரைப்படங்களிலும் பாடல் பாடி அசத்தி வருகின்றனர். இத்துடன், வெளிநாடு நிகழ்ச்சிகளிலும் நாட்டுப்புற பாடல்களை பாடி வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என்ற விவசாய கிராமத்தைச் சேர்ந்த செந்தில், அங்கு புது வீடு கட்டி கிரகபிரவேசம் செய்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “என் தாய் - தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன்” என உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ரசிகர்கள் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இருவருக்கும் இணையங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சூப்பர் சிங்கர் சீசன் 6 டைட்டிலுடன், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பு மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றையும் பரிசாக பெற்றது குறிப்பிடத்தக்கது.