ஹார்மோனிய பெட்டியில் இசைஞானியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சூப்பர் சிங்கர் ஜோடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பின்னணி பாடகர் செந்தில் கணேஷும் அவரது மனைவி ராஜலக்ஷ்மியும் தங்களது ஹார்மோனிய பெட்டி மீது இசைஞானி இளையராஜாவிடம் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார்.

Super Singer fame Senthil Ganesh and Rajalakshmi get Isaingani Ilaiyaraja's autograh

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துக் கொண்ட செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி தம்பதியினர் கிராமிய பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6வது சீசன் டைட்டில் வின்னரான செந்தில் கணேஷ் தனது மனைவி ராஜலக்ஷ்மியுடன் இணைந்து திரைப்படங்களிலும் பாடி வருகிறார். பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின்’ படத்தில் இவர்கள் பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் பாடி வருகின்றனர். இந்நிலையில், இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்த செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி தங்களது ஹார்மோனிய பெட்டியின் மீது ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளனர்.

அது தொடர்பான வீடியோ மற்றும், இசைஞானியின் ஆட்டோகிராஃப் அடங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.