சின்ன மச்சான் பாடலுக்கு பின் மீண்டும் இணையும் செந்தில்-ராஜலக்ஷ்மி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சங்கர் மூவிஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘என் காதலி சீன் போடுறா’ என்ற படத்தில் காதல் பாடல் ஒன்றை சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடி பாடவுள்ளனர்.

After Chinna Machan, Rajalakshmi and Senthil kumar sings in En Kadhali scene Podra

‘அங்காடித் தெரு’ நாயகன் மகேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் புதுமுக நடிகை ஷாலு அறிமுகமாகிறார். இப்படத்தில் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா, அம்பானி ஷங்கர், தியா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ராம்சேவா இயக்கும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலை இன்று இரவு 7 மணிக்கு நடிகர் சசிக்குமார் வெளியிடுகிறார். இந்த பாடலை சூப்பர் சிங்கர் பிரபலமான செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலக்ஷ்மி இணைந்து பாடியுள்ளனர்.

ஏற்கனவே பிரபுதேவா நடித்த சார்லி சப்ளின் 2 படத்தில் செந்தில்-ராஜலக்ஷ்மி பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து ‘என் காதலி சீன் போடுறா’ என்ற படத்தில் பாடியுள்ளதால், இந்த பாடல் மீது எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.