சூப்பர் ஹீரோவாக மாஸ்க்குடன் மாஸாக சிவகார்த்திகேயன்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Nov 28, 2019 10:35 AM
சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ’ஹீரோ’ படத்தின் அடுத்த போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

’நம்ம வீட்டு பிள்ளை' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இந்த படத்தில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ரோபோ சங்கர், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளர்.
சூப்பர் ஹீரோ படமாக உருவாகி உள்ள இப்படத்தின் போஸ்டர்களும் டீசரும் ஏர்கெனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் டிசம்பர் 20 அன்று இப்படம் திரைக்கு வர உள்ளது.
#HeroNewPoster 👍💪 #Dec20 pic.twitter.com/eC9BKhB2Nq
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 28, 2019
Tags : Sivakarthikeyan, Arjun Sarja, Hero