“115 புரொபோசல்ஸ்.. என்னலாம் கிஃப்ட்ஸ் தெரியுமா?”- பெண்களின் ஹார்ட்த்ரோப் கீபோர்ட் கார்த்திக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏராளமான பெண் ரசிகைகளை கவர்ந்த கீபோர்ட் பிளேயர் கார்த்திக் தேவராஜ் தனது ரிலேஷன்ஷிப் குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Super Singer Kerboard player Karthick Devaraj reveals about his relationship status

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கீபோர்ட் வாசிப்பவர் கார்த்திக் தேவராஜ். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகர்களை காட்டிலும் கார்த்திக் தேவராஜிற்கு ரசிகர்கள் அதிகம். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மியூசிக் பேண்டிலும் இருக்கிறார். வெளிநாடுகளில் ஏ.ஆர்.ரகுமான் நடத்தும் கான்சர்ட்களில் கார்த்திக் கீபோர்ட் வாசிப்பாளராக இருக்கிறார்.

குறிப்பாக பல பெண்களின் மனதை கவரும் கார்த்திக் தேவராஜின் தீவிர ரசிகைகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ ஒன்று சமீபத்தில் நிகழ்ச்சியின் நடுவே ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில், Behindwoods தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த கார்த்திக் தேவராஜ், தனது ரிலேஷன்ஷிப் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

அவர் பேசுகையில், ‘இதுவரை 115 புரொபோசல்ஸ் வந்திருக்கிறது. நிறைய பேர் மிகவும் விலையுயர்ந்த ஷூ, பெர்ஃபியூம் போன்றவற்றை எல்லாம் பரிசளித்துள்ளனர். அது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை பேர் எனக்கு ஆதரவு தருகிறார்கள் என்று மகிழ்ச்சியாக இருந்தது. நான் சிங்கிள் தான்’ என்றும் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் மியூசிக் பேண்டில் சேர்ந்தது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்ட கார்த்திக், இதுவரை 3 முறை ஏ.ஆர்.ரகுமான் சார் தனக்கு விலையுயர்ந்த கீபோர்டை பரிசளித்திருப்பதாகவும் கார்த்திக் தெரிவித்தார்.

“115 புரொபோசல்ஸ்.. என்னலாம் கிஃப்ட்ஸ் தெரியுமா?”- பெண்களின் ஹார்ட்த்ரோப் கீபோர்ட் கார்த்திக் வீடியோ