தல-தளபதி ட்ரீட் கொடுத்த சூப்பர் சிங்கர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ சீசனின் இறுதிப்போட்டியில் போட்டியாளர் ஹ்ரித்திக் டைட்டிலை தட்டிச் சென்றார்.

Super singer Junior season 6 title winner Hrithik dedicates songs for Thala-Thalapathy Fans

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் ஜூனியர் போட்டியார்களுக்கான 6வது சீசன் கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், சமீபத்தில் இதன் இறுதிப்போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பல சுற்றுகளில் இனிமையான குரலால் ஜட்ஜஸ், ஆடியன்ஸ் மனதை கொள்ளைக் கொண்ட சிறுவன் ஹ்ரித்திக் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக வழங்கப்பட்டது. சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 டைட்டிலை வென்ற ஹ்ரித்திக், நிகழ்ச்சியில் நடந்த பல சுவாரஸ்யமான தருணங்களை நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார்.

Behindwoods-ல் வி.ஜே.நிக்கியின் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஹ்ரித்திக், சூப்பர் சிங்கர் சீசனில் தனக்கு கிடைத்த பாராட்டுக்கள் பற்றியும், தனது அனுபவம் குறித்தும் பேசினார். அதில் பிரபல பின்னணி பாடகி சித்ரா கூறிய ‘இவன் ரோபோ மாதிரி பாடுவான்’ என்றதும், பின்னணி பாடகர் எஸ்.பி.பி தான் உனது தீவிர ரசிகன் என்று கூறி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்ததையும் ஹ்ரித்திக் நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து சில பாடல்களை தனது இனிமையான குரலால லைவில் பாடியும் அசத்தினார். விரைவில் திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

தல-தளபதி ட்ரீட் கொடுத்த சூப்பர் சிங்கர்..! வீடியோ