ஒய்.ஜி.மஹேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி காலமானார்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 06, 2019 04:10 PM
தமிழ் திரையுலகில், நாடக நடிகராகவும், எழுத்தாளராகவும் மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும், நடிகர் ஒய்.ஜி.மஹேந்திரனின் தாயார், ராஜலட்சுமி பார்த்தசாரதி, சற்று முன் காலமானார்.

93 வயதாகும் இவர், உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதி பட்டு வந்த நிலையில், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவருடைய உடல், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக டி.நகரில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட உள்ளது. நாளைய தினம் இவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால், குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags : Y Gee Mahendran