பிரபல டிவி தொகுப்பாளர் பதிவு - ''இந்து மற்றும் கிறிஸ்டியன் முறைப்படி கல்யாணம்''
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியை தனது வித்தியாசமான குரலால் ஜாலியாக தொகுத்து வழங்கி வந்தவர் பாடகர் திவ்யா.

பிரபல பாடகரான திவ்யா, 'வில்லு' படத்தில் இடம் பெற்ற தீம்தனக்கா, 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் இவருக்கும் தனது நீண்ட கால நண்பர் ஷிபுவை திருமணம் செய்துள்ளார். இவர்களது இருவரது திருமணம் கடந்த வருடம் டிசம்பர் 27 அன்று கோலகலமாக நடைபெற்றது. இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமணம் நடந்து முடிந்த விதம் குறத்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாங்கள் இந்து முறைப்படியும் கிரிஸ்டியன் முறைப்படியும் திருமணம் பண்ணிக்கலாம்னு நெனச்சோம். ஆனா, கிரிஸ்டியன் முறையில் திருமணத்தின் போது என்ன அணிந்து கொள்வது என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
என் கணவர் ஷிபு துபாயில் திருமண உடைகள் டிசைன்ஸ் செய்யும் அவரது நண்பரை அறிமுகப்படுத்தினார். ஆனாலும் எப்படி வேறொரு நாட்டில் இருக்கும் ஒருவர் என் அளவிற்கான உடையை சரியாக செய்ய முடியும் என்று எனக்கு டவுட். ஆனாலும் அவரது பணியால் எனது மனதை ஆக்கிரமித்து விட்டார். எனக்கு வெள்ளை கவுன் வேண்டவே வேண்டாம் என்றேன். அதற்கு அவர், ரோஸ் கோல்டு கலரிலான கவுனை எனக்கு பரிந்துரைத்தார். அது எனக்கு பிடித்திருந்தது. அவரது ஆகச் சிறந்த உழைப்பினால் என் கனவு நினைவானது'' என்று குறிப்பிட்டுள்ளார்.