காவல்துறையிடம் சென்ற ஏ.ஆர்.முருகதாஸ்... தர்பார் விநியோகஸ்தர்கள் விவகாரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளார்.

armurugadoss petitions for police protection over darbar issue

நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் ஹிட் கொடுத்த இவர், அண்மையில் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்தார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைத்தார்.

இந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தனது ஆபீஸுக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளார். தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் தனது ஆபீசுக்கு வந்து தன்னை மிரட்டுவதாக கூறி முருகதாஸ் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.  தர்பார் படத்தால் தங்களுக்கு நஷ்டம் என கூறி விநியோகஸ்தர்கள் சிலர் ரஜினியை சில நாட்களுக்கு முன்னர் சந்திக்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor