பிரபல டிவி தொகுப்பாளர் திவ்யாவிற்கு கோலாகலத் திருமணம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 28, 2019 09:53 PM
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்களில் மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியை தனது வித்தியாசமான குரலால் ஜாலியாக தொகுத்து வழங்கி வந்தவர் திவ்யா.

திவ்யா ஒரு பாடகரும் கூட. இவர் வில்லு படத்தில் இடம் பெற்ற தீம்தனக்கா, தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் இவருக்கும் தனது நீண்ட கால நண்பர் ஷிபுவை திருமணம் செய்துள்ளார். இவர்களது இருவரது திருமணம் நேற்று ( டிசம்பர் 27 ) கோலகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் ஹரிச்சரன், நரேஷ் ஐயர், விஜய் யேசுதாஸ், ராகுல் நம்பியார், தேவன் ஏகாம்பரம், கேஜி ரஞ்சித், சுஜாதா மோகன் ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். திவ்யாவின் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பாடகர் ஹரிச்சரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.