www.garudabazaar.com

25 லட்ச ரூபாய் கடன் வாங்கும் TTF வாசன்.. அவரே சொன்ன காரணம்.. வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன்.

TTF Vasan Speech about 20 lacs loan for own shop

இதற்கு காரணம், தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.

சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின.  டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக  டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

TTF Vasan Speech about 20 lacs loan for own shop

ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன்,  சில வழக்குகளில் சிக்கி இருந்தார். இருப்பினும் தற்போது பைக்குகளில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் வாசன், தனது முதுகில்  ரசிகர்களின் முகங்களை பச்சைக்குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், TTF பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கி ஷாப் வைக்க 20 முதல் 25 லட்ச ரூபாய் கடன் கேட்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் 10 லட்சம் ரூபாய் பணத்தை அந்த கடைக்கு உள்ளக அலங்கார வேலைகளுக்கு செலவிட்டு உள்ளதாகவும் வாசன் கூறியுள்ளார்.

25 லட்ச ரூபாய் கடன் வாங்கும் TTF வாசன்.. அவரே சொன்ன காரணம்.. வீடியோ! வீடியோ

Tags : TTF Vasan

தொடர்புடைய இணைப்புகள்

TTF Vasan Speech about 20 lacs loan for own shop

People looking for online information on TTF Vasan will find this news story useful.