www.garudabazaar.com

OMG: மேடையிலயே கண்ணீர் .. ‘இப்படி ஒரு விசயமா?’.. அந்த மனசுதான் கடவுள்.. எமோஷனல் ஆன சன்னி லியோன..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ் நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG).

OMG Sunny Leone emotional about children education

Also Read | Varisu : ரஞ்சிதமே.. விஜய் பாடும் 'வாரிசு' முதல் சிங்கிள்.. வெளியான GLIMPSE வீடியோ.!

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக அரங்கேறியது.

இசை, நடன கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இவ்விழாவினில் தயாரிப்பாளர் வீர சக்தி , தயாரிப்பாளர் K. சசிகுமார், இயக்குநர் யுவன், நடிகர் தயாரிப்பாளர் RK சுரேஷ் , இயக்குநர் தங்கர் பச்சான், நடிகர் சதீஷ், பிக்பாஸ் போட்டியாளர் நடிகர் ஜிபி முத்து கலந்துகொண்டு பேசினர்.

OMG Sunny Leone emotional about children education

முன்னதாக ஜிபி முத்து பேசும்போது, “இது தான் எனது முதல் திரைப்படம், முன் அனுபவம் இல்லாத எனக்கு, இயக்குனர் தான் பக்கபலமாக இருந்தார். தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர். அந்த பாத்திரம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. அனைவரும் ஆதரவு தாருங்கள்” என பேசினார்.

OMG Sunny Leone emotional about children education

இயக்குநர் யுவன் பேசும்போது,  “தயாரிப்பாளர் மிக தீவிரமான சினிமா ரசிகர் அவரிடம் கதை சொன்ன போதே இந்தப்படத்தை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று விடுவார் என நம்பிக்கை வந்தது. இந்தப்படம் சன்னி லியோன் வந்த பிறகு தான் மிகப்பெரிய படமாக மாறியது. மொழி தெரியாமல் இருப்பினும், மிக அர்ப்பணிப்புடன் கற்றுக்கொண்டு நடித்தார். அவருடன் வேலை பார்க்க மிக எளிதாக இருந்தது. சதீஷ் மிக அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் அனைவருமே கடினமாக உழைத்துள்ளார்கள். கண்டிப்பாக அனைவரும் திரும்ப திரும்ப பார்க்கும் படியான படமாக இருக்கும். நன்றி.” என்று பேசினார்.

OMG Sunny Leone emotional about children education

பின்னர் பேசிய நடிகை சன்னி, “தமிழகம்  வந்து உங்களை சந்திதது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. OMG திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளோம்.  இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை.” என்று கூறினார்.

OMG Sunny Leone emotional about children education

மேலும் பேசியவர், தமது உதவிபெறும் ஆதரவற்ற குழந்தைகள் வரைந்த தமது ஓவியத்தை பெற்றுக்கொண்டதுடன்,  தன்னை அம்மா என குறிப்பிட்டு குழந்தைகள் வரைந்த ஓவியத்தை பார்த்து எமோஷனல் ஆகிவிட்டார். அப்போது பேசியவர், “நான் அழக்கூடாது என முயற்சிக்கிறேன்.. குழந்தைகள் அருமையானவர்கள், தூய்மையானவர்கள். அவர்கள் எதிர்காலம். அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. அவர்களுக்கு போதிய கல்வி, பாராட்டுகள் என அனைத்தும் கிட்ட வேண்டும்” என்று கூறும்போது உணர்ச்சிவசத்தில் கண்கலங்கினார். சன்னி லியோனுக்கு இவ்வளவு இளகிய மனமிருப்பது குறித்து ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.

Also Read | "எனக்கு கார் ஓட்ட தெரியாது".. இயக்குனர் மித்ரன் கார்த்தியுடன் கார் ரைடு.. ஜாலியான வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

OMG Sunny Leone emotional about children education

People looking for online information on GP MUTHU, Oh My Ghost, OMG, OMG Audio Launch, Sunny Leone will find this news story useful.