www.garudabazaar.com

VIDEO: சன்னி லியோனுக்கு பால் கோவா & தர்ஷா குப்தாவுக்கு லட்டு.. கலக்கிய G.P. முத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து, சன்னி லியோன் & தர்ஷா குப்தாவுக்கு முறையே பால்கோவா & லட்டு ஊட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றன.

Gp Muthu feed palkova to sunny leone and laddu to Dharsha Gupta

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. செம புதிய போஸ்டருடன் வெளியான 1ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர். இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது.  டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் G.P. முத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Gp Muthu feed palkova to sunny leone and laddu to Dharsha Gupta

தற்போது சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜி.பி. முத்து  சன்னி லியோனுடன் மேடையில் தோன்றி பேசினார். மேலும் ஜி.பி. முத்து  சன்னி லியோனுக்கு பால் கோவா ஊட்டி விட்டார். பதிலுக்கு சன்னி லியோனும் ஜி.பி‌. முத்துவுக்கு பால் கோவா ஊட்டினார். அதே போல நடிகை தர்ஷா குப்தாவுக்கு ஜி.பி. முத்து லட்டு ஊட்டினார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Gp Muthu feed palkova to sunny leone and laddu to Dharsha Gupta

“ஓ மை கோஸ்ட்”   (OMG) திரைப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

Gp Muthu feed palkova to sunny leone and laddu to Dharsha Gupta

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி. முத்து மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Also Read | "சன்னி லியோன் எனக்கு யாருனே தெரியாது"- OMG பட விழாவில் தலைவர் G. P. முத்து😍

VIDEO: சன்னி லியோனுக்கு பால் கோவா & தர்ஷா குப்தாவுக்கு லட்டு.. கலக்கிய G.P. முத்து! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gp Muthu feed palkova to sunny leone and laddu to Dharsha Gupta

People looking for online information on Bigg boss gp muthu, GP MUTHU, Oh My Ghost Audio Launch, OMG Movie, Sunny Leone will find this news story useful.