"நீ கவலைப்படாத, நாங்க எல்லாரும் இருக்கோம்".. ஷிவினிடம் அன்பை பொழிந்த விக்ரமன் அப்பா!!.. Emotional
முகப்பு > சினிமா செய்திகள்பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
Also Read | "நல்லா விளையாடுறீங்க.. நீங்க போக மாட்டீங்க".. பிரபல போட்டியாளரிடம் சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ் .!
இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது.
இதற்கு மத்தியில், விக்ரமனின் பெற்றோர்கள் வந்த போது போட்டியாளர்களிடம் பேசிய விஷயமும் பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தது. அனைத்து போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு தனித்துவம் இருப்பதாக விக்ரமனின் தந்தை குறிப்பிட, ஏடிகேவின் உடல்நலம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார் விக்ரமனின் தாயார். இதனைத் தொடர்ந்து, விக்ரமன் குறித்து பேசிய அவரது தந்தை, "அவருகிட்ட (விக்ரமன்) இருந்து நான் நிறைய கத்துக்கணும்ங்குறது தான் உண்மை" என கூறியதுடன் ஒரு பார்வையாளராக அவரை பார்ப்பதாகவும் கூறினார்.
இதற்கடுத்து, விக்ரமன் திருமணம் குறித்த பேச்சு எழ, வெளிய வந்ததும் திருமணமா என்றும் மணிகண்டா கேட்கின்றார். அப்போது பேசும் விக்ரமனின் தாயார், "நீங்க எல்லாம் எடுத்து சொல்லுங்க. சம்மதிக்க வெச்சுருங்க" என்றும் கூறுகிறார். "பொண்ணோடயே வந்துருவாரு பாருங்க" என்று ஷிவின் ஜாலியாக சொல்ல, முதல் ஆளாக திருமணத்திற்கு வந்து விடுவேன் என ஏடிகே கூறியபடி, மொய் மட்டும் எதிர்பார்க்காதீர்கள் என்றும் தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ஷிவினிடம் பேசும் விக்ரமனின் தந்தை, "நீ ஒண்ணும் கவலைப்படாத. நாங்க எல்லாரும் இருக்கும் என்ன. கேம் முடிஞ்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு எல்லாம் வா. உன்னோட Guts ரொம்ப பயங்கரமா இருந்தா பெரிய அளவுக்கு நீ வெற்றி அடைவே" என தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ஷிவினிடம் ஜாலியாக பேசும் விக்ரமன், "ஷிவினு, பெரிய ஆளா வருவியாம்." என்றும் குறிப்பிடுகிறார்.
Also Read | ADK அப்பாகிட்ட ஷிவின்-ஐ போட்டு கொடுத்த அமுதவாணன்.. பதிலுக்கு அவர் சொன்ன விஷயம் தான்!!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ADK Father About Shivin To Amudhavanan Bigg Boss House
- Azeem Self About His Play In Bigg Boss 6 Tamil பிக்பாஸ் அசீம்
- ADK Sing A Song For Shivin Housemates Joints To Him In BB6
- Manikanda Family Advices Him To Make Peace With Vikraman
- Shivin Appreciated By All House Mates Family Bigg Boss
- Kathiravan About Vikraman Freeze Task Song Bigg Boss House
- BiggBoss Season 6 Tamil ADK Father Appreciate Vikraman
- ADK About Azeem Guest In Freeze Task To Vikraman Bigg Boss
- Bigg Boss Sivin Ganesan Aka Shivin Cried After Seeing Friends
- Amudhavanan Son Imitate Vikraman Serious Dialogue Housemate Reacts
- Shivin About Dhanalakshmi Eviction To Her Friends Bigg Boss
- Shivin Friends Visit Bigg Boss House Freeze Task Emotional
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: "Myna, நீ Bigg Boss-க்கு லாய்க்கு இல்ல" திட்டி தீர்த்த Yogi😳 தோலுரிக்கும் Fatman Review
- AZEEM மாதிரி பேசி அசத்திட்டாரு😂... Bigg Boss வீட்டை சிதறவிட்ட Amudhavanan மகன்
- 🔴LIVE: "செருப்பால அடிச்சுட்டு Congrats-அ" கடுப்பான Rachitha 😭 தோலுரிக்கும் Fatman Review
- Bigg Boss-ல பொய்யா பழகுறாங்க, 🥲 என்ன பண்ணாலும் பயமா இருக்கும் - Janany,
- 🥰தேவதைக்கு வெக்கம் வந்தள்ளலோ! வெட்கப்பட்டு பாடிய JANANY
- Bigg Boss Task, எங்களுக்கே வெறுப்பா இருக்கும் 😟டேய் எங்க இருந்து டா வாரீங்க? - Janany
- 🔴LIVE: அழுகையுடன் Dhana OUT சரியா? தப்பா?...கண்கலங்கிய Kamal 😭 தோலுரிக்கும் Fatman Review
- 🔴LIVE: Vikraman, Azeem மோதல் 😡 தப்பா பேசினதுக்கு கண்டித்த Kamal 🔥 தோலுரிக்கும் Fatman Review
- 🔴LIVE: கொல காண்டில் Azeem 😡 "Vikraman கட்ட பஞ்சாயத்து வேல இங்க வேணாம்" 🔥 தோலுரிக்கும் Fatman Review
- 🔴LIVE: 80'S KIDS-னு சொல்லிட்டு எண்ணலாம் பன்றாங்க பாருங்க 💥 தோலுரிக்கும் Fatman Review
- "Vikraman Yellow-Line Task-னால Evict ஆனேன்!" - Bigg Boss Janany Interview
- "Azeem நீ நடிகனே இல்ல 😡 மன்னிப்பு கேட்கணும்" - Devipriya Reveals Real Shooting Spot Secrets