சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா & ஸ்ரீகாந்த்… கலர்ஃபுல் first look போஸ்டரோடு வெளியான Title

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தர் சி இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Sundar c Jai jiiva srikanth movie title announced viral poster

சுந்தர் சி…

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி. அதற்கு அவரின் உள்ளத்தை அள்ளித்தா, வின்னர், கலகலப்பு, கிரி உள்ளிட்ட படங்களே சாட்சி. அதே நேரத்தின் அன்பே சிவம் போன்ற தரமான படங்களையும் இயக்கி தன் திறமையை நிரூபித்தவர். இடையில் நடிகராகவும் பல படங்களில் நடித்து கலக்கினார். இப்போது இயக்கம் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடிகராக வல்லான், பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Sundar c Jai jiiva srikanth movie title announced viral poster

யுவன் – சுந்தர் சி கூட்டணி…

சமீபத்தில் அரண்மனை படங்களின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இது சுந்தர் சி யின் ஸ்டைலிலான ஜாலியான படம் என சொல்லப்பட்டது. இந்த படத்தை  குஷ்பூவின் Avni Cinemax தயாரிக்கிறது. இந்த படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், மாளவிகா ஷர்மா மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர்.  வின்னர் படத்துக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் சுந்தர் சி – யுவன் ஷங்கர் ராஜா காம்போ இணைந்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sundar c Jai jiiva srikanth movie title announced viral poster

வெளியான தலைப்பு…

இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்புத் தள வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தனர் படக்குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு ‘காஃபி வித் காதல்- coffee with Kadhal’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நாம் முன்பே அறிவித்திருந்தோம். அதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போது படத்தின் புதிய போஸ்டரோடு ‘காஃபி வித் காதல்’ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் இடம்பெற்றுள்ள கலர்ஃபுல்லான போஸ்டரும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. போஸ்டர், அனைவரும் மணக்கோலத்தில் இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.

Sundar c Jai jiiva srikanth movie title announced viral poster

தொடர்புடைய இணைப்புகள்

Sundar c Jai jiiva srikanth movie title announced viral poster

People looking for online information on Coffee with kadhal, Divya Dharshini, Jai, Jiiva, Raiza Wilson, Srikanth, Yogi Babu will find this news story useful.