ஆர் கண்ணன் இயக்கத்தில் கடவுள் வேடத்தில் யோகிபாபு… TIME TRAVEL வேறயா…வெளியான Title

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Yogi babu new movie with R Kannan title announced

Also Read | "விஜய் பத்தி வாரம் ஒரு குட்டி ஸ்டோரி சொல்ல போறேன்!".. ஷோபா சந்திரசேகர்.. Exclusive ப்ரோமோ!

யோகிபாபுவின் வெற்றி…

சின்னத்திரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்களில் யோகி பாபுவும் ஒருவர். தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் அவர் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன. தற்போது அவர் தளபதி 66 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

Yogi babu new movie with R Kannan title announced

இயக்குனர் ஆர் கண்ணனோடு கூட்டணி…

இந்நிலையில் ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங், தள்ளிப் போகாதே போன்ற பல படங்களை டைரக்ட் செய்த ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த  படத்திற்கு "பெரியாண்டவர்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் கண்ணன்  இப்பொழுது , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்  'தி கிரேட் இந்தியன் கிச்சன்', மிர்ச்சி சிவா நடிக்கும் 'காசேதான் கடவுளடா' படங்களை டைரக்ட் செய்து முடித்து, வெளியிடும் வேலைகளில் உள்ளார்.

Yogi babu new movie with R Kannan title announced

சிவன் வேடத்தில் யோகி பாபு…

பெரியாண்டவர் படத்தில் யோகி பாபு சிவன் வேடம் அணிந்து கதை நாயகனாக நடிக்கிறார். இது ஒரு டைம் டிராவலர் படம். வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக முன்னணி நடிகை நடிக்க உள்ளார். அதற்கான நட்சத்திர தேர்வு நடைபெறுகிறது.  இதன் படபிடிப்பு கோடைகாலம்  முடிந்ததும் ஆரம்பமாகிறது.

Yogi babu new movie with R Kannan title announced

பிரம்மாண்ட செட்…

யோகிபாபு சிவன் வேடம் ஏற்று நடிப்பதால், சிவன் கோவில் செட் ஒன்று ECR  ரோட்டில் ரூபாய் 50 லட்சம் செலவில் பிரமாண்டமாக அமைக்கிறார்கள்.   வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால் கபிலன் வைரமுத்து இப்படத்தில் பாடல்கள் எழுதி  வசனகர்த்தாவாக ஆர்.கண்ணனுடன் இணைகிறார். சிவன் கதையோடு டைம் டிராவ்லர் கதை என்பதால், சி.ஜி மற்றும் கிராபிக்ஸ் காட்சிக்காக மும்பை பெரிய நிறுவத்துடன் பேசி வருகிறார்கள். மசாலா பிக்ஸ் நிறுவனம் 9வது படமாக இப்படத்தை தயாரிக்கிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Yogi babu new movie with R Kannan title announced

People looking for online information on ஆர் கண்ணன், யோகிபாபு, R Kannan, Yogi Babu, Yogi babu new movie will find this news story useful.