Nenjuku Needhi

BGM 2022: இப்படி யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. தன் photo-வ பார்த்து கமெண்ட் அடித்த யோகி பாபு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் உள்ள island மைதானத்தில் நடந்துவருகின்றன.

Yogi babu comments different getups in BGM 2022

பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் விருதுகள்…

8 ஆவது Behindwoods Gold Medals Award விருது நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நிகழ்வாக சென்னை தீவுத்திடலில் நடக்கிறது. நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, நடிகர்கள் மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், நடிகை சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், பாடகர்கள் அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி சுவாரஸ்யமான விறுவிறுப்பாகவும் நடந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது.

Yogi babu comments different getups in BGM 2022

ஒரு பக்கம், பிரபலங்களின் நடன நிகழ்வுகள் நடந்தன. சன்னி லியோன் உள்ளிட்ட பிரபலங்களின் நடனம் இடம்பெற்றது. அதுபோலவே பல கலைஞர்கள் விருதினையும் வென்றிருந்தனர். லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன், ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, டான்ஸ் மாஸ்டர் ஜானி, யோகி பாபு, ஞானவேல், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

Yogi babu comments different getups in BGM 2022

வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் யோகி பாபு…

இந்த விழா மேடையில் பல சுவாரஸ்யமான தருணங்கள் பார்வையாளர்களை ரசிக்கவைத்தன. நடிகர் யோகி பாபு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் அவர் மேடைக்கு வந்த போது அவரின் பல புகைப்படங்கள் வித்தியாசமான ஹேர்ஸ்டைலோடு அவரிடம் காட்டப்பட்டன. அந்த புகைப்படங்களைப் பார்த்த அவர் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் தன்னுடைய பாணியில் ஜாலியாக கமெண்ட் அடித்து ரசித்துப் பார்த்தார். அவரின் கமெண்ட்கள் பார்வையாளர்களை சிரிக்க வைத்த்ன.

Yogi babu comments different getups in BGM 2022

Yogi babu comments different getups in BGM 2022

People looking for online information on Behindwoods gold award, BGM 8 will find this news story useful.