''எல்லா ஒயின் ஷாப்பும் கொரோனா விற்கத் தொடங்கிட்டாங்க போல...'' - பிரபல இயக்குநர் வேதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு அத்தியாவசியக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடைகளின் முன்புறம் ஆண்கள் பெண்கள் பாகுபாடின்றி நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கிச் சென்ற செய்திகள் வைரலானது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் வருகிற 7 ஆம் தேதி முதல் மதுபானக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் மதுபானக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கை குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''எல்லா ஒயின் ஷாப்பும் கொரோனா விற்க தொடங்கிட்டாங்க போல என்று யூகிக்கிறேன். உங்களிடம் ஸ்டாக் இருக்கும், ஏழை மக்கள் என்ன செய்வார்கள் என என்னைப்பார்த்து  சிலர் சொல்வார்கள் என்று உறுதியாக இருக்கிறேன். எனக்கும் ஸ்டாக் தீர்ந்து பல நாள் ஆச்சு. பாதுகாப்பு தான் முக்கியம்'' என்று குறிப்பட்டுள்ளார்.

Entertainment sub editor