கொரோனா வைரஸினால் பிரபல இசைக் கலைஞர் பலி - சோகத்தில் மூழகிய ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வருகிறது. உயிர் கொல்லி நோயான கொரோனாவால் உலக அளவில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

Famous musician dies battling Coronavirus at 71 ft Dave Greenfield | கொரோனா வைரஸின் காரணமாக பிரபல இசைக் கலைஞர் பலி

உலக அளவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனாவின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது ஒரு சோக செய்தி கிடைத்துள்ளது. அதன் படி பிரபல பாடகரும் இசைக்கலைஞருமான டேவ் கிரீன் ஃபீல்டு மரணமடைந்துள்ளார்.

அவருக்கு வயது 71. டேவ் கிரீன் ஃபீல்டிற்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த மே 3 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Entertainment sub editor