சிம்புவின் பிறந்தநாள்..."நீங்க இல்லாம நானில்ல" வைரலான கொண்டாட்டம் ! Photos and Videos உள்ளே.
முகப்பு > சினிமா செய்திகள்இன்று நடிகர் சிம்பு தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளன.

தமிழ்சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மன்மதன், வல்லவன், வின்னைத்தாண்டி வருவாயா படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவரது நடிப்பில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தயாராகி வருகிறது. மேலும் ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மஹா படத்திலும் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிம்பு தனது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தனது அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அம்மாவுடன் சிம்பு பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது. இந்த பிறந்தநாள் விழாவில், நடிகர் ஹரிஷ் கல்யான், விடிவி கனேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சிம்புவின் ரசிகர்கள் அவர் வீட்டின் முன் குவிந்து, சிம்புவுக்கு வாழ்த்து தெரிவிக்க, அவர்களுடன் இணைந்து சிம்பு தன் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். மேலும் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள மகா படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
At Thalaivan Residency Life time goal achieved #HappyBirthdaySTR pic.twitter.com/EC7GkRXXqL
— Subash (@SubashSTRKohli) February 2, 2020