“என் நெஞ்சில் குடியிருக்கும்...” - பிக் பாஸ் சாண்டியின் ‘வெறித்தனம்’ டான்ஸ் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இரண்டாவது வெற்றியாளரான டான்ஸ் மாஸ்டர் சாண்டி, தளபதி விஜய்யின் ‘வெறித்தனம்’ பாடலுக்கு நடனமாடியுள்ள கவர் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

En Nenjil Kudiyirukkum.. Bigg boss Sandy Bigil Verithanam dance

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸிடம் கலாட்டா செய்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டையே கலகலப்பாக வைத்திருந்தவர் சாண்டி. இடையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும், அவர் நடந்துக் கொண்ட விதம் மக்கள் மனதில் சாண்டிக்கான இடத்தை உறுதி செய்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் முகென் வெற்றியாளராகவும், சாண்டி இரண்டாவது வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து, சாண்டி தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்று வருகிறார். இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வெறித்தனம்’ பாடலுக்கு தனது டான்ஸ் ஸ்டூடியோ மாணவர்களுடனும், தனது மகள் லாலாவுடனும் இணைந்து நடனமாடும் கவர் வீடியோ ஒன்றை சாண்டி வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுடன், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி..” எனவும் குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 போட்டியில் தனக்கு ஆதரவளித்து அன்பு செலுத்திய ரசிகர்களுக்கு ‘வெறித்தனம்’ பாடல் மூலம் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

வீடியோ இதோ: - https://www.instagram.com/tv/B3Yr9D8HifK/?igshid=1reaeqk5qxd1d