கார்த்தி - ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் , கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள இயக்குநர் ஜித்து ஜோசஃப். இவர் கார்த்தி, ஜோதிகா ஆகியோரது நடிப்பில் ஒரு தமிழ் படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

Karthi and Jyotika, Sathyaraj for to act new film directed by Jeethu Joseph

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜீத்து ஜோசஃப் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்துக்கு 96 படப் புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வியகாம் 18 மற்றும் பேரலெல் மைண்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.