STR Is Back..! - ஹன்சிகா படத்தில் ஸ்டைலிஷ் கெட்டப்பில் இருக்கும் சிம்பு!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 31, 2019 06:28 PM
யு.ஆர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் ஜமீல் பகிர்ந்துள்ளார்.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் வரும் பாடல் காட்சியின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘மஹா’ படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இப்படத்தில் பிக் பாஸ் சீசன் 3 பிரபலமான தர்ஷனின் தோழி நடிகை சனம் ஷெட்டியும் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நேவி ஆபீஸர் கெட்டப்பில் இருக்கும் சிம்புவுடன் இயக்குநர் ஜமீல் உரையாடும் புகைப்படத்தை ஜமீல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#str #simbu 👑 pic.twitter.com/oHcMHxoelT
— U.R.Jameel (@dir_URJameel) October 31, 2019