STR நீங்க..! - பிக் பாஸ் தர்ஷனின் தோழி நடிகை சனம் ஷெட்டி கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 10, 2019 11:35 AM
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் பிரபல போட்டியாளரான தர்ஷனின் தோழியாக அறியப்படும் நடிகை சனம் ஷெட்டி, நடிகர் சிம்புவை சந்தித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'அம்புலி', 'கதம் கதம்', 'சவாரி' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமான சனம் ஷெட்டி, பிக் பாஸ்-ல் தர்ஷனுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வந்தார். மேலும் தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்ட போது, ''இது வருத்தமான நிகழ்வு. பிக்பாஸ் இது அழகில்லை” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததையொட்டி, இரண்டாவது வெற்றியாளரான சாண்டியையும், அவரது ஜிகிரி தோஸ்தான தர்ஷனையும் நடிகர் சிம்பு சந்தித்தார். இவர்களை ஊக்குவிக்கும் விதமாக இருவருக்கும் புத்தகம் ஒன்றையும் சிம்பு பரிசளித்திருந்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகர் சிம்புவுடன் சனம் ஷெட்டியும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பகிர்ந்த சனம் ஷெட்டி, “நிறைய நடிகர்களை எனக்கு பிடிக்கும், ஆனால், STR-க்கு உண்மையான ரசிகை. அவரை பற்றி கொஞ்சம் தான் தெரியும், ஆனால் அன்பை அளவின்றி கொடுக்கும் உள்ளம் படைத்த ஒரு மனிதரை இவரிடம் தான் கண்டேன். அனைவரையும் ஒரே மரியாதை மற்றும் அன்புடன் நடத்துவார். தர்ஷன் மற்றும் எனக்கு நீங்கள் அளித்த உத்வேகம் வேற லெவல். வி லவ் யூ சிம்பு. தர்ஷனுக்கு நீங்கள் பரிசளித்த ‘ஹீரோ’ புத்தகம் மிகவும் பிடித்துள்ளது”.
“அனைத்து சீசன்களிலும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஆதரவளிப்பதும், அவர்களது கரியரை வடிவமைப்பதில் வழிகாட்டியாகவும் STR இருந்து வருகிறார். சொக்கத்தங்கம் நீங்க..” என குறிப்பிட்டுள்ளார்.