விஜய் சேதுபதி - மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 31, 2019 05:07 PM
முதன்முறையாக விஜய்சேதுபதி மற்றும் மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்து நடிக்கும் VSP 33 திரைப்படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளது

சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார்.
பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நிவாஸ் கே பிரச்சன்னா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இப்படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
Here is the title look of #YaadhumOoreYaavarumKelir@ChandaraaArts @cineinnovations @roghanth @akash_megha @nivaskprasanna @ruggyz @designpoint001 @rkajay94 @onlynikil @CtcMediaboy pic.twitter.com/A3LghlGWg8
— VijaySethupathi (@VijaySethuOffl) October 31, 2019