ஜீவா படத்திற்காக பிரபல பாடகரின் மகனை அறிமுகம் செய்த டி.இமான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவனின் இளைய மகனை இசையமைப்பாளர் டி.இமான் திரை இசையில் அறிமுகம் செய்கிறார்.

D Imman introduces Shankar Mahadevan's younger son in Jiiva's Seeru

இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வரும் ‘சீறு’ திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வில்லனாக பிரபல நடிகர் நவ்தீப் நடித்து வருகிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவனின் இளைய மகன் சிவம் மகாதேவனை தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகம் செய்கிறார். சிவம் மகாதேவன் பாடிய பாடலை விவேகா எழுதியுள்ளார்.

காதல், ஆக்‌ஷன், டிராம, எமோஷன்ஸ் என கமர்ஷியல் படமாக ஜீவாவின் ‘சீறு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.