‘மறக்க முடியாது.. அதும் தளபதியோட அந்த...’ - விஜய் குறித்து ‘பிகில்’ ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து பிரபலம் ஒருவர் நடனமாடவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Soundara Raja shares Bigil experience with Thalapathy Vijay

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்த்தில் நடித்த நடிகர் சவுந்தரராஜா தளபதி விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘பிகில் படத்தில் எனது பணிகல் முடிந்தது. மிகச்சிறந்த, மறக்க முடியாது அனுபவம், 30 நாட்கள் விஜய் அண்ணாவுடன். அவருடைய எளிமை, பெர்ஃபெக்‌ஷன் பற்றி சொல்ல வார்த்தையே இல்லை. குறிப்பாக அவர் கட்டிப்பிடித்ததும், அவரது சிரிப்பும். இந்த வாய்ப்பளித்த இயக்குநர் அட்லிக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து படத்தின் டீசர், இசை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.