Big 'பிகில்' Breaking: விஜய்யுடன் இந்த பாடலில் தோன்றும் Popular ஸ்டார்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 01, 2019 06:38 PM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து பிரபலம் ஒருவர் நடனமாடவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சிங்கப்பெண்ணே’ பாடலுக்கு நடிகர் விஜய்யுடன் இணைந்து இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தோன்றவிருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து படத்தின் டீசர், இசை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
BIG 'பிகில்' BREAKING: விஜய்யுடன் இந்த பாடலில் தோன்றும் POPULAR ஸ்டார் வீடியோ