www.garudabazaar.com

விடுதலை - 1 படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா.. எப்போ? வெற்றிமாறன் கொடுத்த  அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விடுதலை படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா குறித்து இயக்குனர் வெற்றிமாறன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Soori Vetrimaaran Vijay Sethupathi Viduthalai Movie Audio Launch Update

Images are subject to © copyright to their respective owners.

Also Read | OSCARS 2023: தீபிகா படுகோனேக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.. OSCARS கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

விடுதலை படக்குழு

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Soori Vetrimaaran Vijay Sethupathi Viduthalai Movie Audio Launch Update

Images are subject to © copyright to their respective owners.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Soori Vetrimaaran Vijay Sethupathi Viduthalai Movie Audio Launch Update

Images are subject to © copyright to their respective owners.

விடுதலை அப்டேட்

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Soori Vetrimaaran Vijay Sethupathi Viduthalai Movie Audio Launch Update

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ஒன்னோடு நடந்தா" சில நாட்களுக்கு முன் வெளியானது. பாடலாசிரியர் சுகா எழுத்தில், தனுஷ் & அனன்யா பட் குரலில், இளையராஜா இசையில், இந்த பாடல் வெளியானது. 

Soori Vetrimaaran Vijay Sethupathi Viduthalai Movie Audio Launch Update

Images are subject to © copyright to their respective owners.

விடுதலை டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் என்று இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | கவின் நடித்த DADA .. படம் பார்த்த நடிகர் கார்த்தி என்ன சொல்லிருக்காருனு பாருங்க 😍

தொடர்புடைய இணைப்புகள்

Soori Vetrimaaran Vijay Sethupathi Viduthalai Movie Audio Launch Update

People looking for online information on Soori, Vetrimaaran, Viduthalai, Viduthalai Movie Audio Launch, Vijay Sethupathi will find this news story useful.