www.garudabazaar.com

OSCARS 2023: தீபிகா படுகோனேக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.. OSCARS கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆஸ்கார் விருது விழாவில் நடிகை தீபிகா படுகோனே உலக அளவில் பெரிய அந்தஸ்தை பெற உள்ளார்.

Oscars 2023 Deepika Padukone Joined as Presenter at Academy Awards

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வளைகாப்புக்கு வரமுடியாத சூழ்நிலையில் கணவர்.. வீடியோ Call செய்த நடிகை பூர்ணா 😍 CUTE PHOTOS

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர்.

தீபிகா படுகோனே, 2007-இல் ஷாருக்கான் நடித்த 'ஓம் சாந்தி ஓம்' இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார். ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

Oscars 2023 Deepika Padukone Joined as Presenter at Academy Awards

Images are subject to © copyright to their respective owners.

தீபிகா படுகோன் சமீபத்தில்  கெஹ்ரையான், 83, பதான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு, ​​தீபிகா படுகோனே கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராகவும் தீபிகா படுகோனே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Oscars 2023 Deepika Padukone Joined as Presenter at Academy Awards

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே, 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருது வென்ற பிரபலங்களுக்கு விருது வழங்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Oscars 2023 Deepika Padukone Joined as Presenter at Academy Awards

Images are subject to © copyright to their respective owners.

பிரபலங்கள் எமிலி பிளண்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டான், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் இந்த விருது வழங்குபவர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கின்றனர். 95வது ஆஸ்கார் விருதுகள் விழா ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 12, 2023 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Academy (@theacademy)

Also Read | அல்லு அர்ஜூன் உடன் புதிய படத்தில் இணைந்த பிரபல இளம் இயக்குனர்.. செம அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Oscars 2023 Deepika Padukone Joined as Presenter at Academy Awards

People looking for online information on Academy Awards, Deepika Padukone, Oscars 2023 will find this news story useful.