www.garudabazaar.com

அப்போ ரோஜா ஸ்ரீ.. இப்போ பூஜா.. பாட்டு, டயலாக்னு அமர்க்களம் பண்ணும் DJ பிளாக் | super singer 9

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : ஏறக்குறைய 90களின் பிற்பகுதியில் தமிழில் சாட்டிலைட் டிவி சேனல்கள் வளர்ச்சி அடைந்தன. தற்போதைய காலங்களில் பல டிஜிட்டல் நிறுவனங்களில் இயங்கி வருகின்றன.

after roja sri DJ Black fun songs to super singer pooja

Image Credit : vijay television

Also Read | OSCARS 2023: தீபிகா படுகோனேக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.. OSCARS கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு!

சின்னத்திரை நிகழ்ச்சிகள்

சேனல்களைப் பொறுத்தவரை சாட்டிலைட் சேனல்களும் இயங்கி வருகின்றன. சாட்டிலைட் சேனல்களும் டிஜிட்டலில் தங்களுடைய தளத்தை வலுவாக நிறுவி இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும் வெகுஜன மக்கள் வீடுகளில் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விடவில்லை. என்னதான் ஸ்மார்ட் போன் யுகம் வந்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தனித்துவமாக விளங்கி வருகின்றன.

after roja sri DJ Black fun songs to super singer pooja

Image Credit : vijay televisionc

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

தொலைக்காட்சிக்கான பிரத்தியேக நிகழ்ச்சிகள் அதற்கான வடிவமைப்புகள் என எல்லாமே இன்னும் அதற்குரிய பிரம்மாண்டத்துடன் இருப்பதை காண முடிகிறது. அந்த வகையில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சேனலாக தமிழகத்தில் பிரபலமான சேனல் விஜய் டிவி. தொடக்க காலத்தில் விஜய் டிவி என்கிற பெயரிலும் பிற்காலத்தில் ஸ்டார் விஜய் என்கிற பெயரிலும் வளர்ச்சி அடைந்த விஜய் டிவி, பின்னர் திரைப்படங்கள் மற்றும் த்ரோபேக் நிகழ்ச்சிகளுக்காக விஜய் சூப்பர், பாடல்களுக்காக விஜய் மியூசிக் ஆகிய உப சேனல்களை தொடங்கியது. இந்த சேனல்களுக்கும் பெரும் வரவேற்பு உண்டானது.

after roja sri DJ Black fun songs to super singer pooja

Image Credit : vijay television

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 9வது சீசன்

சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் மற்றும் விவாத நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகளை பல்வேறு பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல் ஒளிபரப்பு செய்யும் விஜய் டிவி, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற பெருவாரியான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. அதிலும் விஜய் டிவி விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும், ஜோடி நம்பர் ஒன் என்கிற நிகழ்ச்சியும் பிரபலமாக இருக்கின்றன. அவ்வகையில் அண்மையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கியது.  .

after roja sri DJ Black fun songs to super singer pooja

Image Credit : vijay television

டிஜே பிளாக்

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பிஜே பிளாக். விஜய் டிவியின் நகைச்சுவை, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் டிஜே பிளாக் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். முன்னதாக ஓ சொல்றியா ஓஓ சொல்றியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா ஸ்ரீ என்னும் பெண்ணிற்கு பாடல் போட்டு அசத்திய டிஜே பிளாக் வைரலானார். இதன் மூலம் ரோஜா ஸ்ரீயும் வைரலானார்.  இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் பூஜாவிற்கு ரொமான்டிக் பாடல்களையும் பட வசனங்களையும் அவ்வப்போது தட்டிவிடுகிறார் டிஜே பிளாக். இதனால் இந்த நிகழ்ச்சியின் இந்த கலகலப்பான பகுதிகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Also Read | அல்லு அர்ஜூன் உடன் புதிய படத்தில் இணைந்த பிரபல இளம் இயக்குனர்.. செம அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

after roja sri DJ Black fun songs to super singer pooja

People looking for online information on DJ Black, Roja sri, Super singer 9, Super Singer Pooja, Vijay Television will find this news story useful.