www.garudabazaar.com

கவின் நடித்த DADA .. படம் பார்த்த நடிகர் கார்த்தி என்ன சொல்லிருக்காருனு பாருங்க 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“டாடா” படம் குறித்து நடிகர் கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.

Actor Karthi tweet about Dada Movie Kavin Aparna Das

Images are subject to © copyright to their respective owners.

Also Read | OSCARS 2023: தீபிகா படுகோனேக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.. OSCARS கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு!

டாடா ரிலீஸ்

ரொமாண்டிக் திரைப்படமாக 'டாடா' திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.

டாடா படக்குழு

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Actor Karthi tweet about Dada Movie Kavin Aparna Das

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

சிறப்புக் காட்சி

பட ரிலீஸ் அன்று இந்த படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில்  நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Actor Karthi tweet about Dada Movie Kavin Aparna Das

Images are subject to © copyright to their respective owners.

கார்த்தியின் பாராட்டு

இந்நிலையில், டாடா படத்தினை பார்த்த பிறகு நடிகர் கார்த்தி, படம் குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "இறுதியாக டாடா படத்தை பார்த்து விட்டேன். என்ன ஒரு அதிசிறந்த படம்! இவ்வளவு நல்ல எழுத்து மற்றும் திரைப்பட உருவாக்கம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Actor Karthi tweet about Dada Movie Kavin Aparna Das

Images are subject to © copyright to their respective owners.

படத்தில் அனைவரின்  நடிப்பும் சிறப்பு. கவின் - இது மிகவும் அழகான முழுமையான நடிப்பு.  டாடா குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்." என கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.

Also Read | அல்லு அர்ஜூன் உடன் புதிய படத்தில் இணைந்த பிரபல இளம் இயக்குனர்.. செம அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Karthi tweet about Dada Movie Kavin Aparna Das

People looking for online information on Aparna Das, Dada, Karthi, Karthi tweet about Dada Movie, Kavin will find this news story useful.