கொரோனா நேரத்துல ஷூட்டிங்கிற்காக வெளியே போனேனா? - கொந்தளிக்கும் ரஜினி பட ஹீரோயின்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இப்பிழையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே மாதம் 3 -ம் தேதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் பட நடிகையான சோனாக்ஷி சின்ஹா போன் பேசிக்கொண்டே போவது போலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

கொரோனா நேரத்துல ஷூட்டிங்கா கொந்தளித்த ரஜினி பட ஹீரோயின் sonakshi sinha blasts popular director on spreading rumours about her in corona lockdown

இந்நிலையில் பிரபல இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி "இந்த மாதிரி நேரங்களில் யார் ஷூட்டிங் நடத்துவது?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதனைப் பார்த்த நடிகை "ஒரு இயக்குநராக இருந்தும், பல யூனியன்களில் உறுப்பினராக இருக்கும் நீங்கள் நாட்டில் நடப்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். ஸ்டுடியோக்கள் மூடப்பட்டுள்ளதால், தேசிய ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. இது பழைய புகைப்படம். 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி எடுக்கப்பட்டது" என்று கொந்தளித்து  ட்வீட் போட்டுள்ளார்.

Entertainment sub editor