மீண்டும் கர்ப்பமானார் புன்னகை அரசி "சினேகா"!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 23, 2019 01:51 PM
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகையான சினேகா புன்னகை அரசி என அழைப்பட்டு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவர். இளமையான புன்னகைக்கு சொந்தக்காரரான சினேகா கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த 'என்னவளே' படத்தின் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.

தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த இவர் 2000ம் காலகட்டங்ககளில் இயக்குனர்களின் ராசியான நடிகையாக நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் 'வசீகரா', அஜித்துடன் 'ஜனா', விக்ரமுடன் கிங்', சுர்யாவுடன் 'உன்னை நினைத்து', தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்', உள்ளியிட்ட படங்களில் பரவலாக பேசப்பட்டாலும் ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது.
இதற்கிடையில் 2009ல் வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்த சினேகா பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து அவரை கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர்.
இந்நிலையில் சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் இரண்டாவது குட்டி வீட்டிற்கு வந்துவிடும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அறிந்த பரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரசன்னா சினேகா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்