ப்ரித்விராஜின் மலையாள படத்தில் வில்லனாகும் தமிழ் ஹீரோவின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 17, 2019 08:53 PM
மலையாளத்தில் ப்ரித்விராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘பிரதர்ஸ் டே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் நடிகர் பிரசன்னா மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார்.

தமிழில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படத்தில் அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த கலாபவன் சாஜன் இப்படத்தை இயக்குகிறார். லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இயக்குநர் நாதிர்ஷா இசையமைக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, பிரயாகா மார்டின், மியா ஜார்ஜ், ஆயிமா ரோஸ்மி செபஸ்டியன் உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் நடிகர் பிரசன்னாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தவிர நடிகர் பிரசன்னா, மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளையின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் ‘திரவம்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
#Brothersday from this Onam😊🙏 pic.twitter.com/RTf0FYeEpu
— Prasanna (@Prasanna_actor) August 17, 2019