நடிகர் அருண் விஜய் னடிப்பில் உருவாகி வரும் ‘மாஃபியா’ திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

‘துருவங்கள் பதினாறு’ இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஃபியா’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இதன் ஷூட்டிங் பணிகளை ஒரே கட்டமாக முடிக்க இயக்குநர் கார்த்திக் நரேன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குற்ற பின்னணியில் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரசன்னாவின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரசன்னாவின் கெத்து லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தை தவிர அருண் விஜய் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’,‘சாஹோ’, ‘பாக்ஸர்’ மற்றும் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.
DK - The antagonist 😈 @Prasanna_actor#MAFIA 🍁 @karthicknaren_M @arunvijayno1 @priya_Bshankar @DoneChannel1 pic.twitter.com/hlL94fLFE7
— Lyca Productions (@LycaProductions) July 12, 2019