‘கோமாளி’-யில் கேமியோ ரோலில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 14, 2019 03:53 PM
நடிகர் ஜெயம்ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்ட போட்டியாளர் ஒருவர் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு. கே.எஸ்.ரவிக்குமார், ஷா ரா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆக.15ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாடலாசிரியரும் பிக்பாஸ் சீசன் 1-ன் போட்டியாளருமான சினேகன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போதைய பிக்பாஸ் போட்டியாளரான சாண்டி இந்த படத்தில் ஒளியும் ஒலியும் பாடலுக்கு நடனம் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Snehan, Jayam Ravi, Kajal Aggarwal, Comali, Pradeep Ranganathan