அசுர வேகத்தில் அருண் விஜய்-கார்த்திக் நரேனின் ‘மாஃபியா’ டீம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 21, 2019 05:10 PM
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஃபியா’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘துருவங்கள் பதினாறு’ இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஃபியா’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். குற்ற பின்னணியில் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசன்னா வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கிய நிலையில், பட ஷூட்டிங் பணிகளை ஒரே கட்டமாக முடிக்க இயக்குநர் கார்த்திக் நரேன் திட்டமிட்டிருந்தார். அதன்படி, இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
‘மாஃபியா’ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்காக அருண் விஜய் மற்றும் பிரசன்னா ஆகியோர் தாய்லாந்து சென்றுள்ளனர். இன்று (ஆக.21) காலை இறுதியாக நடைபெற்று வருகிறது. இந்த ஷெடியூலுடன் இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைகிறது.
இந்த படத்தை தவிர அருண் விஜய் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’,‘சாஹோ’,‘பாக்ஸர்’ மற்றும் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.