"என் இதயத்திற்கு நெருக்கமான..." - குக் வித் கோமாளி நடிகையின் எமோஷனல் கருத்து!
முகப்பு > சினிமா செய்திகள்குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் அந்நிகழ்ச்சி குறித்து எமோஷனலாக கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் ரியாலிட்டி ஷோவான இதில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உமா ரியாஸ், ரேகா, வனிதா விஜயகுமார், மோகன் வைத்தியா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் பாலா, தாடி பாலாஜி, புகழ், மணிமேகலை உள்ளிட்டோரும் கோமாளிகளாக கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'இந்த வாய்ப்பளித்த விஜய் டிவிக்கு நன்றி, வெங்கடேஷ் பட் மற்றும் தாமு சாரின் அறிவுரைகளுக்கும், என்னுடன் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சி எனது மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். பலரது அன்பை இது பெற்று தந்திருக்கிறது. எனக்கு ஊக்கமளித்த ரசிகர்கள் அனைவருக்கும் என நன்றிகள்' என அவர் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.