அம்மாவான பின்.. மாடர்ன் உடையில் காஜல் அகர்வால் வெளியிட்ட Photo.. இணையத்தில் செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தாயான பிறகு, நடிகை காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் பகிர்ந்துள்ள புகைப்படம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Kajal Aggarwal picture in modern dress gone viral

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் அடுத்தடுத்து வெற்றி படங்களைக் கொடுத்து, கொடி கட்டிப் பறந்தவர் நடிகை காஜல் அகர்வால்.

தான் நடிக்க ஆரம்பித்து, கொஞ்ச காலத்திலேயே விஜய், சூர்யா, அஜித், தனுஷ் என பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்து, ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பிரபலம் ஆனார்.

தொழிலதிபருடன் திருமணம்

தென் இந்திய சினிமாவில் அதிரடியாக வலம் வந்த காஜல் அகர்வால், கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். மும்பையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர்களின் திருமணமும் நடைபெற்றிருந்தது.

கர்ப்பமான வயிறுடன் புகைப்படங்கள்

இதனையடுத்து, காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக, அவரது கணவர் கவுதம் கிச்சலு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கு மத்தியில், தன்னுடைய கர்ப்பமான வயிறு தெரியும் படி, புகைப்படங்கள், நடனமாடும் வீடியோக்கள், வொர்க் அவுட் வீடியோக்கள் என பலவற்றை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து வந்தார். இது தொடர்பான காஜல் அகர்வாலின் பதிவுகள், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.

Kajal Aggarwal picture in modern dress gone viral

பிறந்த ஆண் குழந்தை

அதே போல, அவர் வெளியிட்டிருந்த வளைகாப்பு புகைப்படங்களும், ரசிகர்களின் வாழ்த்தினை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இது தொடர்பாக, அதிகாரபூர்வ அறிவிப்பு, கவுதம் மற்றும் காஜல் தரப்பில் இருந்து வெளியாக, பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை அனைவரும் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்கி இருந்தனர்.

Kajal Aggarwal picture in modern dress gone viral

மாடர்ன் உடையில் ஃபோட்டோ

இந்நிலையில், குழந்தை பிறந்த பிறகு, மாடர்ன் உடையில் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். கோடை காலத்தில் அதிக வெப்பநிலை உள்ளதாக ஹேஸ்டேக் மூலம் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

Kajal Aggarwal picture in modern dress gone viral

இது தொடர்பான பதிவில், ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதிக லைக்கினை அள்ளி வரும் இந்த புகைப்படம், பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

அம்மாவான பின்.. மாடர்ன் உடையில் காஜல் அகர்வால் வெளியிட்ட PHOTO.. இணையத்தில் செம வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal picture in modern dress gone viral

People looking for online information on Kajal Aggarwal, Modern Photoshoot, Pregnant will find this news story useful.