நடிகை ப்ரியா பவானி சங்கரிடம் அசாத்திய திறமை இருப்பதால், பாலிவுட்டுக்கு செல்லலாம் என்று மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என்று பல திறமைகளை கொண்டிருப்பவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இறைவி, ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இப்படங்களைத் தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை, இறவக்காலம், மான்ஸ்டர், உயர்ந்த மனிதன் ஆகிய படங்களில் நடுத்துள்ளார். இதில், மான்ஸ்டர் படம் வரும் 17ம் தேதி வெளியாக இருப்பதாக அறிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், நடிகை ப்ரியா பவானி சங்கரிடம் அசாத்திய திறமை இருக்கிறது. அவர், பாலிவுட் படங்களில் நடிக்கலாம் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.