ஒவ்வொரு வாரமும் தமிழில் மட்டும் நான்கு அல்லது ஐந்து திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் வரும் 10ஆம் தேதியும் ஐந்து திரைப்படங்கள் வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகும் விஷாலின் 'அயோக்யா' திரைப்படத்தின் சென்சார் தகவலும், அடுத்த வாரம் வெளியாகவுள்ள 'மான்ஸ்டர்' திரைப்படத்தின் சென்சார் தகவலும் தற்போது வெளியாகவுள்ளது.
விஷாலின் 'அயோக்யா' திரைப்படத்திற்கு 'யூஏ' சான்றிதழும், எஸ்.ஜே.சூர்யாவின் 'மான்ஸ்டர்' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழும் சென்சார் அதிகாரிகள் அளித்துள்ளனர்,.
அயோக்யா திரைப்படத்தில் விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கட்மோகன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் விஷ்ணு ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
#Monster🐀 is coming for ‘U’ from May17 pic.twitter.com/eH0eJzxDQf
— S.R.Prabhu (@prabhu_sr) May 7, 2019
Anticipated release of this Summer, #AYOGYA certified U/A is set for a grand release this Friday. #AyogyaCensoredUA #AyogyaIn3Days @Screensceneoffl @RaashiKhanna @TagoreMadhu @ivenkatmohan @SamCSmusic @AntonyLRuben @KarthikVenkatr4 @art_murthi @LightHouseMMLLP @LahariMusic pic.twitter.com/s7nWzIsNFT
— Vishal (@VishalKOfficial) May 7, 2019