‘மான்ஸ்டர்’ படத்தில் இருந்து வெளியான சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்  உருவாகியுள்ள ‘மான்ஸ்டர்’ படம்  வரும் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அஜித், விஜய்யை வைத்து ஹிட் படங்களைத் கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய இவர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது  அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மான்ஸ்டர்’ என்ற படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது எலியிடம் சிக்கித் தவிக்கும் கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன், பிரியா பவானிசங்கர், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளவர்,  ஒரு நாள் கூத்து படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்திற்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ‘மாயா’, ‘மாநகரம்‘ படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் மே 8 வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது 

 

MONSTER AUDIO RELEASE MAY 8

“a Justin Prabhakaran musical”

Happy Monstering !@iam_SJSuryah @priya_Bshankar @nelsonvenkat @justin_tunes @gokulbenoy @editorsabu @SonyMusicSouth

Enjoy this perfect entertainer in theatres from May 17. #MonsterFromMay17🐀 pic.twitter.com/GcH6c4wtc0

— Potential Studios LLP (@Potential_st) May 6, 2019